சபை ஒழுங்கு CHURCH ORDER - COD-23 ஜெபர்ஸன்வில், இந்தியானா,அமெரிக்கா 58-10-07 1 இக்கூடாரத்தில் ஐந்து இரவுகள் நடைபெற்ற கூட்டங்களின் முடிவுக்கு நாம் வந்திருக்கிறோம், தேவனுடைய கிருபையினாலும், அவருடைய ஒத்தாசையினாலும், நாம் பிரன்ஹாம் கூடாரத்தில் விசுவாசம் கொண்டுள்ள பிரகாரமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சபையை ஒழுங்குக்குள் வைக்கும்படியாக வேதவாக்கியங்களைக் கொண்டு நான் கடினமாக முயற்சி செய்துள்ளேன். 2. நான் கூற விரும்பும் முதலாவது காரியம் என்னவெனில், நான் சபையில் இல்லாத நாட்களில் எப்போதுமே மேய்ப்பர் தான் முழு பொறுப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டும், நான் சபைக்குத் திரும்பி வரும்போது, மேய்ப்பரை மாத்திரமே கவனிப்பேன். எனவே, நான் தூரமாய் இருக்கும் போது, பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின் கீழாக, எதையும் மாற்றவோ அல்லது அவர் சிறந்ததென்று எண்ணுகிறபடி எதையும் செய்யவோ அவருக்குத் தான் முழு பொறுப்பும் உள்ளது. 3. நாம் ஒரு அப்போஸ்தல பிரகாரமான சபையிலும், இந்நாளின் ஜனங்களுக்காக அப்போஸ்தல ஆசீர்வாதங்களை போதிப்பதிலும் விசுவாசம் கொண்டுள்ளோம். நாம் முழு சுவிசேஷத்தில் விசுவாசம் கொண்டுள்ளோம். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரும்பி வருகிற வரையில், அவர் உரைத்துள்ள அடையாளங்கள் அற்புதங்கள் எல்லாம் அவருடைய சபையில் தொடர்ந்து வரும் என்று விசுவாசிக்கிறோம். நாம் அந்த சபை ஒழுங்கு காரியங்களை விசுவாசிக்கிறோம், அவைகள் ஒழுங்குக்குள் இருக்க வேண்டும் என்றும், சபையானது அதனுடைய ஒழுங்குக்குள் இருக்கிறது என்றும் விசுவாசிக்கிறோம். ஒவ்வொரு சபைக்கும் அதனுடைய உபதேசங்களும், ஒழுங்குகளும், கட்டுப்பாடுகளும் உண்டு. 4. நம்முடைய சபையில் அங்கத்தினர்களை சேர்ப்பவர்களாக யாரும் கிடையாது. ஜீவனுள்ள தேவனுடைய முழுஉலகளாவிய சபை தான் நம்முடைய சகோதரர்களும் சகோதரிகளுமாக உள்ளனர் என்று விசுவாசிக்கிறோம்; ஜனங்கள் தாங்கள் எந்த ஸ்தாபனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பொருட்டல்ல, ஜெபர்ஸன்வில், இந்தியானாவிலுள்ள, எய்த் அன்டு பென் தெருவில் அமைந்துள்ள பிரன்ஹாம் கூடாரத்திற்கு எல்லா ஜனங்களும் எப்போதுமே வரவேற்கப்படுகின்றனர். 5. நாம், "விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதலில் (justification)” (ரோ.5:1) விசுவாசம் கொண்டுள்ளோம். ஒரு நபர் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்ட பிறகு, அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் சமாதானமாயிருக்கிறார் என்று விசுவாசிக்கிறோம். ஆனால் இதே நபர் குடித்தல், புகைபிடித்தல், அவர் செய்யக் கூடாத காரியங்களைச் செய்தல், மாம்சத்தின் அருவருப்பான பழக்கங்கள் போன்ற பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்கக் கூடும் என்பது சாத்தியமே. 6. அதன் பிறகு இயேசு கிறிஸ்துவின் இரத்தமானது கர்த்தருடைய ஊழியத்திற்காக அந்நபரை பரிசுத்தப்படுத்துகிறது என்று விசுவாசிக்கிறோம். அதாவது, எபிரெயர் 13:12 மற்றும் 13-ன் படி, "பரிசுத்தமாக்கப்படுதல் (sanctification)” என்பதை விசுவாசிக்கிறோம், "அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தம் செய்யும் படியாக நகரவாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.” புதிய ஏற்பாட்டில் பரிசுத்தமாக்கப்படுதல் போதிக்கப்படுகிறது என்றும் நாம் இப்பொழுது ஜீவித்துக் கொண்டிருக்கும் புதிய ஏற்பாட்டின் காலத்தினூடாக விசுவாசிகளுக்காக அது சம்பவிப்பது சாத்தியமே என்றும் விசுவாசிக்கிறோம். அந்த நபர் பரிசுத்தமாக்கப்பட்ட பிற்பாடு, அசுத்தமான பழக்கவழக்கங்கள் அந்நபரை விட்டு போய் விடும் என்றும்கூட நாம் விசுவாசிக்கிறோம். 7. அவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய ஒரு விசுவாசியாக இருக்கிறான், அவனுடைய பழக்க வழக்கங்கள் போய் விட்டது, அப்போது, அவன், விசுவாசியை நிரப்புவதற்காக வருகிற "பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை” நாடுபவனாக இருக்கிறான் என்று விசுவாசிக்கிறோம். அதன் பிறகு அந்த விசுவாசி... 8. அது அநேக நேரங்களில் நான் எண்ணியபடியே இருக்கிறது, அது ஒரு கண்ணாடிக் குவளையைக் கோழிப்பண்ணையிலிருந்து எடுப்பது போன்றதாகும். நீதிமானாக்கப்படுதல் என்பது இருதயத்தில் ஒரு நோக்கத்தோடு, "அந்த குவளையை எடுத்து அதை உபயோகப் படுத்துவதற்காக ஆயத்தமாக வைப்பதாகும்.” அதைத்தான் தேவன் அந்த பாவிக்குச் செய்கிறார். அவன் இன்னும் அசுத்தமானவனாகத் தான் இருக்கிறான். 9. அதன் பிறகு அவன் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் சுத்திகரிக்கப்படுகிறான். பரிசுத்தமாக்கப்படுதல் என்ற வார்த்தையானது ஒரு கூட்டு வார்த்தையாகும். அதற்கு அர்த்தம் என்னவெனில், "சுத்திகரிக்கப்பட்டு ஊழியத்திற்காக ஒதுக்கி வைக்கப் படுதலாகும்.'" பழைய ஏற்பாட்டில், பலிபீடமானது பாத்திரத்தை பரிசுத்தப்படுத்தி, அது ஊழியத்திற்காக ஒதுக்கி வைக்கப்படுகிறது. 10. பரிசுத்த ஆவியானவர் அதே பாத்திரத்தை ஊழியத்திற்கென்று வைக்கிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம். பரிசுத்தாவி என்பது கிருபையின் அடுத்தபடியல்ல, ஆனால் கூடுதலான அதே கிருபையானது 1-கொரிந்தியரில் உரைக்கப்பட்ட அப்போஸ்தல வரங்களைப் போன்ற அடையாளங்களும் அற்புதங்களும் இருக்கும் அளவிற்கு அது அந்த விசுவாசியை நிரப்பி, சபை ஒழுங்கு... பரிசுத்த ஆவியானவர் அந்த வரத்தைக் கொண்டு வரும் போது, அந்த விசுவாசியின் வழியாக தம்மைத்தாமே வெளிப்படுத்துகிறார். 11. "வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதல் இன்றியே கொடுக்கப்படுகிறது" என்று வேத வாக்கியம் போதிக்கிறது என்பதை நான் விசுவாசிக்கிறேன், நாம் இந்த உலகத்தில் பிறக்கும் போது, நாம் இங்கே ஒரு நோக்கத்துடன் அனுப்பப்படுகிறோம், அதாவது தேவனுக்காக. நாம் வயது வந்தவர்களாக ஆகும் முன்பதாக, நாம் இன்னும் பிள்ளைகளாக இருக்கையில், நாம் தேவனுடைய வரங்களை நமக்குள் கொண்டிருக்கிறோம், பரிசுத்த ஆவியானவர் நிரப்பும் போது மட்டுமே அந்த வரங்கள் கிரியை செய்யும்; ஆனால், போதகர்கள், அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், அந்நிய பாஷை வரங்கள், மற்றும் 1-கொரிந்தியர் 12-ன் படியான ஒன்பது ஆவிக்குரிய வரங்கள் போன்றவற்றை தொடக்கத்திலேயே நாம் கொண்டு உள்ளோம். இப்பொழுது, இந்த வரங்கள் இன்று கிரியை செய்கின்றன என்றும் அவைகள் ஒவ்வொரு உள்ளூர் சபைகளிலும் இருக்க வேண்டும் என்றும் நாம் விசுவாசிக்கிறோம். 12. அப்படிப்பட்டவைகள் இருந்த போதிலும், உலகம் முழுவதும் அப்போஸ்தல விசுவாசிகளாய் இருக்கிறோம் என்று அறிக்கை செய்யும் ஜனங்கள் அதிகமான மதவெறித் தனத்தனத்தால் இழுக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மற்ற ஒழுங்குகளிலும் இன்னும் பிறவற்றிலும் இருப்பதைப் போன்று, நாம் மத வெறித்தனத்தில் இருக்கிறோம். அவைகள் தொடக்கத்திலிருந்து இருந்து வந்துள்ளன, காலங்களினூடாக நாம் அவைகளைக் கொண்டு இருந்தோம். அப்போஸ்தலர்களுடைய நாளிலும் அவர்கள் அதைக் கொண்டிருந்தனர்; பவுல் அங்கே சொன்னது போல, சிலர் எப்படியாக வந்து, “வேறு உபதேசங்களுக்குப் பின்னால் செல்லும்படி அவர்களை வற்புறுத்தினார்கள்” இன்னும் மற்றவைகள். ஆனால் அவனுடைய சொந்த போதகத்தில், அவன் போதித்தவைகளைக் காட்டிலும் "பரலோகத்திலிருந்து வரும் ஒரு தூதன் வேறு எதையாவது போதித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” என்றான். 13. எனவே, இங்கே எயித் அன்ட் பென் தெருவில் அமைந்துள்ள பிரன்ஹாம் கூடாரத்தில் இருக்கிற நாம் புதிய ஏற்பாட்டின் உபதேசங்களை பின்பற்ற முயற்சிக்கிறோம். “இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன்” என்று நாம் விசுவாசிக்கிறோம். அப்போஸ்தலனாகிய பவுல், புறஜாதி சபையை ஒழுங்கிற்குள் வைப்பதற்காக அனுப்பப்படும் பொருட்டு, தேவனுடைய தெரிந்து கொள்ளுதலின் மூலம் அழைக்கப்பட்டு, தெரிந்து கொள்ளப்பட்ட பாத்திரமாக இருந்தான். 14. இப்பொழுது, பிரன்ஹாம் கூடாரத்தில், "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்” முழுகி எடுக்கப்படும் “தண்ணீர் ஞானஸ்நானத்தில்” நாம் விசுவாசம் கொண்டுள்ளோம், அது வேதாகமத்திலுள்ள அப்போஸ்தல போதகமாயுள்ளது. பிரன்ஹாம் கூடாரத்தின் எல்லா அங்கத்தினர்களும் அல்லது இங்கு வாஞ்சித்து வருபவர்களும், அவர்களுக்கு எந்த சமயத்திலும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் முழுகி (ஞானஸ்நானம் கொடுக்கப்படும்) (அவர்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.) மேய்ப்பரை கலந்து பேசலாம்; அவர்கள் மனந்திரும்பி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால், மேய்ப்பர் அவரால் கூடுமான வரை எவ்வாளவு கூடுமோ அவ்வளவு சீக்கிரமாக அவர்களுக்கு உடனடியாக ஞானஸ்நானம் கொடுப்பார். இது அவர்களை விசுவாசிகளின் ஐக்கியத்திற்குள் கொண்டு வருகிறது. தண்ணீர் ஞானஸ்நானத்தின் மூலமாக நாம் ஒரு ஐக்கியத்திற்குள் கொண்டு வரப்படுகிறோம் என்று விசுவாசிக்கிறோம். 15. ஆனால் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலம், நாம் உலகம் முழுவதிலுமுள்ள இயேசு கிறிஸ்துவின் சரீரமாகிய அங்கத்தினர்களுக்குள் கொண்டு வரப்படுகிறோம். 16. இப்பொழுது, நாம் விசுவாசிக்கும் மற்றொரு காரியம் என்னவெனில், "ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய சபை ஒழுங்கு பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டு இருக்கிறது” என்பதாகும். இப்பொழுது, இந்த வரங்களும் மற்றவைகளும் சபையில் கிரியை செய்யும் போது, விருப்பமும் வாஞ்சையும் கொண்ட ஆவியின் வரங்களைப் பெற்ற ஜனங்கள் வந்து நம்முடன் ஆராதிப்பார்கள் என்று நாம் விசுவாசிக்கிறோம். 17. இப்பொழுது, அநேக இடங்களில், ஜனங்களில் இந்த வரங்கள் இருந்து, இந்த வரங்களை எவ்வாறு உபயோகப்படுத்துவது என்றோ, எப்போது உபயோகப்படுத்துவது என்றோ அறியாதவர்களாக, அவ்விதம் செய்து கொண்டிருந்தால், அவர்கள் ஒரு நிந்தையை மாத்திரமே கொண்டு வருவார்கள் என்று நாம் கண்டு கொள்கிறோம்; புறம்பே இருக்கிறவர்களைக் கொண்டும், அவிசுவாசிகளைக் கொண்டும் மற்றவர்களைக் கொண்டும் சாத்தான் அதைச் செய்யக்கூடும் என்று நாம் விசுவாசிக்கிறோம், இந்நாட்களில் தேவன் சபைக்குக் கொடுத்திருக்கிற இந்த அற்புதமான ஆசீர்வாதங்களைக் குறித்து நாம் பயப்பட வேண்டும். 18. பவுல், "ஒரு அந்நியர் நம் மத்தியில் வரும்போது, நாமெல்லாரும் அந்நிய பாஷையில் பேசுவோமானால், அம்மனிதன் போய், நம்மை பைத்தியக்காரர்கள் என்று கூறமாட்டானா ஆனால் ஒருவன் தீர்க்கதரிசனம் உரைத்து, இருதயத்தின் அந்தரங்கத்தை அறிந்து கொண்டால், அவர்கள் முகங்குப்புற விழுந்து, 'தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறார், என்று சொல்லுவான்” என்றான். 19. இப்பொழுது, விசுவாசிகள் மத்தியிலுள்ள ஆவிக்குரிய வரங்கள் இந்த நாளின் ஒழுங்காய் உள்ளது என்று நாம் விசுவாசிக்கிறோம். ஒரு மனிதன் சுகமளித்தலின் வரத்தையோ அல்லது தீர்க்கதரிசன வரத்தையோ அல்லது அந்நிய பாஷைகளில் பேசுவதையோ அல்லது பாஷைக்கு அர்த்தம் உரைப்பதையோ அல்லது இந்த மற்ற எந்த வரங்களையுமோ மறுதலித்து, அம்மனிதன் ஊக்குவித்தலின் கீழே பிரசங்கிக்க முடியும் என்றோ அல்லது அவன் ஒரு ஊக்குவிக்கப்பட்ட போதகர் என்றோ நாம் விசுவாசிப்பதில்லை. 20. ஆகையால், தேவனுடைய வார்த்தையில் தான் என்னுடைய விசுவாசம் உள்ளது. அதே விதமாகவே இங்கே ஜெபர்ஸன்வில்லில் எய்த் அன்ட் பென் தெருவில் உள்ள பிரன்ஹாம் கூடாரத்திலும் நடைமுறைபடுத்தப்பட வேண்டும். நான் எண்ணிப் பார்க்கும் முதலாவது காரியமும் விசுவாசிக்கும் முதலாவது காரியமும் என்னவெனில், கர்த்தரிடத்தில் அனுகூலம் அடையும்படி, நான் கூறுகிற இந்தக் காரியங்கள் அத்தியாவசியமானதும் பிரன்ஹாம் கூடாரத்தில் இவ்விதமாக செய்யப்படவும் வேண்டும். எந்த நேரத்திலாவது இந்தக் காரியங்களைக் குறித்து கேள்வி எழுமானால், அதைக் குறித்து கேள்வி எழுப்புகின்ற நபர் - தாங்கள் மேய்ப்பரை அழைக்க முடியவில்லை என்றால் என்னிடம் யோசனை கேட்கலாம் அல்லது மேய்ப்பரிடம் கலந்தாலோசிக்கலாம். நான் பிரயாணங்களை மேற் கொள்ளாமல் நான் வீட்டில் இருந்தால், பொது ஜனங்களுக்கோ அல்லது மேய்ப்பருக்கோ எந்த சமயத்திலும் உதவி செய்ய மகிழ்ச்சியாயிருப்பேன். இந்தக் காரியங்கள் வேதப் பூர்வமானது, இது சபையின் ஒழுங்கு என்று நான் விசுவாசிக்கிறேன். 21. முதலாவது பிரன்ஹாம் கூடாரத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் அல்லது ஆராதனை செய்கிற ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் அதிகமாக தெய்வீக அன்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், அது... அவர்கள் இங்கிருந்து போக வேண்டியதாய் இருக்கும் போதும், இரவில் ஆராதனைக்குப்பிறகு ஒருவர் மற்றவரை விட்டு போகும் போதும், அவர்கள் இருதயங்கள் ஒருவர் மற்றவருக்காக வாஞ்சையுள்ளவர்களாக இருக்க வேண்டும். நான் "தெய்வீக அன்பில்” ஒரு உண்மையான விசுவாசியாக இருக்கிறேன். அது பரிசுத்த ஆவியின் நிரூபணம் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான். "நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லா மனுஷரும் அறிந்து கொள்வார்கள்” என்று இயேசு கூறினார். தேவனுடைய அன்பு தான் இயேசு கிறிஸ்துவை உலகத்தில் அனுப்பி, நம் எல்லாருக்காகவும் மரிக்கும்படி செய்தது என்று நாம் விசுவாசிக்கிறோம். "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்." இங்கே கூறப்பட்டிருக்கும் நித்திய ஜீவன் என்பது "தேவனுடைய சொந்த ஜீவனாக” இருக்கிறது, ஏனெனில் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் மூலமாக நாம் தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம்; அது ஆபிரகாமுடைய வித்தாயிருக்கிறது, அவன் விருத்தசேதனம் பண்ணப்படுவதற்கு முன்பு, அவன் விசுவாசித்த போது, அவன் கொண்டிருந்த விசுவாசத்தை நமக்கு அருளுகிறார். 22. இப்பொழுது, அடுத்த காரியமாக, ஆராதனை செய்கிற இவர்கள் - அந்நிய பாஷை போன்ற வரங்களைப் பெற்றிருக்கிற ஜனங்களும், வெளிப்பாடுகளும் அர்த்தம் உரைத்தல்களும் மற்றவைகளும் உடைய ஜனங்களும் ஒன்றாகக் கூடி சந்திக்க வேண்டும் என்று நாம் விசுவாசிக்கிறோம். ஆராதனை தொடங்குவதற்கு முன்பு குறைந்தது 45 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரம் இந்த அங்கத்தினர்கள் அல்லது இன்னும் சரியாகச் சொன்னால், இந்த விசுவாசிகள் ஒன்றாகக் கூடி வர வேண்டும். குறித்த நேரத்திற்கு முன்பே சபையானது திறக்கப்பட்டு, ஆராதனை தொடங்குவதற்கு முன்னால், விசுவாசிகள் இந்த இரவுகளில் குறைந்தது 45 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரம் வரை ஒன்றாகக் கூடி வர வேண்டும். 23. பிரன்ஹாம் கூடாரத்தில் எல்லா நேரங்களிலும் குறித்த நேரத்திற்கு முன்பே வருகிறவரும், ஆவியால் நிரம்பினவரும் பியானோ இசைக்கருவி மீட்டுகிறவருமாகிய ஒருவர் இருக்க வேண்டும் என்று நான் விசுவாசிக்கிறேன், அவர் பரிசுத்த ஆவியால் நிறைந்து, "மீட்பர் மரித்த குருசண்டை , நான் ஜெபித்த ஸ்தலத்தண்டை பாவத்திலிருந்து தூய்மையானேன்; என் இருதயத்தில் இரத்தம் பூசினார், அவர் நாமத்திற்கே மகிமை!” போன்ற ஆவிக்குரிய சங்கீதத்தை மென்மையாக, மிகவும் மென்மையாக இசைக்க வேண்டும். அதே மாதிரியான ஏதோவொன்றாக அது இருக்க வேண்டும். "உம்மண்டை தேவனே, உம்மிடம்." "பிளவுண்ட மலையே, புகலிடம் தாருமே.” அல்லது "சிலுவையண்டை " அல்லது அதே மாதிரியான ஏதோவொன்றாக இருக்கலாம்; அவர் மென்மையாகவும், மெதுவாகவும், இடைவிடாமல் பரிசுத்தாவியைக் கொண்டு தியானம் பண்ணுகிற நிலையில் இசைக்க வேண்டும், அது அவனோ அல்லது அவளோ யாராகவும் இருக்கலாம். 24. அதன் பிறகு, ஆராதிப்பவர்கள் உள்ளே வரும் போது, அவர்களை சந்தித்து, அவர்களுடைய... அவர்களுடைய கோட்டுகளையும், தொப்பிகளையும் உபசரணையுடன் அவர்களுடைய இருக்கைகளில் காணத்தக்கதாக தொங்க விட வேண்டியது யாரென்றால், பரிசுத்தாவியால் நிறைந்த உதவிக்காரர்களோ அல்லது டீக்கன்மார்களோ மட்டுமே என்று நான் விசுவாசிக்கிறேன். ஜீவனுள்ள தேவனுடைய சபையானது தொடர்ந்து செல்லுவதைக் காணும்படி, அது அன்புடன் செய்யப்பட வேண்டும். 25. ஆராதிக்கிற இவர்கள் ஒருவர் மற்றவரோடு பேசவோ, குறுக்கே பேசவோ, சபையில் கூச்சல் போடுவதோ கூடாது. 26. அவர்கள் ஒன்றாக வர வேண்டும். முதலாவதாக, ஓசையின்றி சிறிது நேரம் அமைதியாக ஜெபிக்க வேண்டும், அநேகமாக பீடத்தில். சத்தமாக ஜெபிக்க வேண்டாம், நீங்கள் அவ்வாறு செய்தால், வேறு யாரோ ஒருவருக்கு தடையாய் இருக்கிறீர்கள்; அமைதியாக ஜெபியுங்கள், நீங்கள் ஆராதனையில் இருக்கிறீர்கள். உங்கள் ஆவியில் ஆராதித்து, அதன் பிறகு உங்கள் இருக்கைக்குத் திரும்பிச் செல்லுங்கள். 27. அல்லது, நீங்கள் பீடத்திற்குப் போக வேண்டியதில்லை. அப்படியே உள்ளே வந்து, ஒரு இருக்கையைப் பெற்றுக் கொண்டு, உட்கார்ந்து கொண்டு, இசையைக் கேளுங்கள்; உங்கள் கண்களை மூடிக் கொண்டு, தலையைத் தாழ்த்துங்கள்; தொடக்கத்திலிருந்தே அமைதியாயிருந்து தேவனை ஆராதியுங்கள். 28. அதன் பிறகு, ஆவியானவர் வேறொருவருக்கு ஏதோவொன்றை வெளிப்படுத்தவோ அல்லது - அல்லது பரிசுத்த ஆவியால் நிரம்பின யாரோ ஒருவர் அந்நிய பாஷையில் பேசும் படியான ஒரு நிலைக்கு வருவாரானால், அந்த நபர் எழுந்து நின்று செய்தியைக் கொடுக்க வேண்டும். அர்த்தம் உரைத்தல் வருவது மட்டுமாய் ஒவ்வொருவரும் அமைதி காக்க வேண்டும். 29. அர்த்தம் உரைத்தல் வரும் போது, அது வேத வாக்கியத்தை மேற்கோள் காட்டுவதாகவோ அல்லது அர்த்தமற்ற எதுவாகவோ இருக்கக்கூடாது. அது சபைக்கு நேரடியான ஒரு செய்தியாக இருக்க வேண்டும், அல்லது அது மாம்சீகமானதாக இருக்கும் என்று நாம் எண்ணுகிறோம். நாம் அதைக் குறித்த அநேகமானவைகளைக் காண்கிறோம். மேலும் இப்பொழுது, ஆவியானவர், "சபைக்கு பக்திவிருத்தி” உண்டாக்குவதற்கு மாத்திமே பேச வேண்டும் என்று நான் - நான் விசுவாசிக் கிறேன். 30. இப்பொழுது, அது ஒருவேளை இந்த மாதிரியான ஏதோவொரு செய்தியாக இருக்கலாம். ஜனங்கள் இந்நேரத்தில் கூடி வரும் போது, ஒருவேளை சில வியாதிப்பட்ட ஜனங்களும் உள்ளே வரலாம். அங்கே முடமானவராய் இருக்கிற (paralyzed) அல்லது ஏதோவொன்றால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் படுத்துக் கிடக்கலாம். நீங்கள் அம்மனிதனை இதற்கு முன்பு ஒரு போதும் கண்டதில்லை. ஆனால் அர்த்தம் உரைத்தல் வரும் போது, அது இதே விதமான ஏதோவொன்றாக இருக்கலாம்; அர்த்தம் உரைத்தல் அல்லது சற்று முன்னர் பேசினவர், “நல்லது, கர்த்தர் உரைக்கிறதாவது, நம்முடைய மத்தியில் இருக்கிற இம்மனிதன் இன்ன - இன்ன இடத்திலிருந்து வருகிறான்” என்று சொல்லலாம், மேலும் அந்த இடத்தை விவரித்துக் கூறலாம். "அவர் முடமானவராயுள்ளார், ஏனெனில் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன்பு,” அல்லது அது என்னவாகவும் இருக்கலாம், இந்த காரியம் ஒரு வேளை, "அவர் தீமையான ஏதோவொன்றை செய்தார்." இது போன்று "அவருடைய மனைவியையும் பிள்ளைகளையும் விட்டு ஓடினார். அவர் மேசையின் சாய்வான உதைகால் இணைகளுள் ஒன்றிலிருந்து (trestle) விழுந்தார்” அல்லது அதைப் போன்ற ஏதோவொன்று, "அது அவரைக் காயப்படுத்தி, முடமாக்கிப் போட்டது. கர்த்தர் உரைக்கிறதாவது, அவர் அதிலிருந்து மனந்திரும்பி, தம்முடைய மனைவியிடம் சென்று, அவர் தாமே ஒப்புரவானால், இப்பொழுதே அவர் சுகமாக்கப்பட்டு, அவருடைய குடும்பத்தினரிடம் திரும்பிச் செல்வார்” என்ற விதமாக சொல்லப்படலாம். 31. அதன் பிறகு, யாராவது எதையாவது சொல்லுவதற்கு முன்பு, ஆவியை நன்றாகப் பகுத்தறியக் கூடியவர்களும், சுவிசேஷ உபதேசத்தில் நல்ல ஆவிக்குரிய நிலையில் உள்ளவர்களுமாய் கட்டிடத்திற்குள் இருக்கிற, குறைந்தது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மனுஷர்கள் எழுந்து நின்று "அது கர்த்தருடையது” என்று கூற வேண்டும். 32. இந்தக் காரியம் செய்யப்படவில்லையென்றால், அந்நிய பாஷையானது சபையில் பேசக் கூடாது. அந்த நபர் அந்நிய பாஷையில் பேசினால், பவுல் சொன்னான், "அர்த்தம் உரைக்கிறவன் இல்லாவிட்டால்” மேலும் இது போன்ற மற்றவைகள், "அவர்கள் வீட்டில் பேசட்டும்”, அல்லது அவர்கள் ஒருவேளை எங்கிருந்தாலும், "அவர்கள் தாங்கள் மாத்திரமே ஆசீர்வதிக்கப்படுகின்றனர், அது சபையின் பக்திவிருத்திக்காக அல்ல” என்றான். 33. பிறகு, இந்த நபர் பேசின பிற்பாடு, அதற்கு அர்த்தம் உரைக்கப்பட்ட பிற்பாடு, பரிசுத்த பவுலுடைய வேதாகம உபதேசத்தின்படி, இரண்டு அல்லது மூன்று நிதானிக்கக் கூடியவர்கள் (judges) - அது, “இரண்டு அல்லது மூன்று நிதானிக்கக் கூடியவர்களால் நிதானிக்கப்பட வேண்டும்.” 34. பிறகு, அது (பரிசுத்த ஆவி) யாரை அழைக்கிறாரோ, அந்த நபர் போகக்கடவன். அதற்காக ஒரு குறிப்பிட்ட நபரோ அல்லது மேய்ப்பரோ அல்லது யாரோ ஒருவரோ நியமிக்கப்பட்டிருக்கலாம், அவர் சென்று வியாதியிலோ அல்லது உபத்திரவத்திலோ இருக்கும் நபரின் மேல் கைகளை வைக்கலாம். அவர்கள் சுகமடைவார்கள். மேய்ப்பரோ அல்லது வேறு நபரோ, போய் "விசுவாச ஜெபத்தை ஏறெடு” என்று பரிசுத்த ஆவியானவரால் நியமிக்கப்பட்ட யாராக இருந்தாலும் அவர்கள் சென்று ஆவியானவர் சொன்னதின்படியே அந்த நபருக்கு ஊழியம் செய்யக்கடவர்கள். அந்த நேரத்தில், அந்நபர்... பரிசுத்த ஆவியானவர் என்ன சொன்னாலும், அவர் அதை கூறினபடி அது உடனடியாக செய்யப்பட வேண்டும். 35. அதன் பிறகு ஜனங்கள் களிகூர்ந்து, நன்றி செலுத்தி, துதித்து தேவனை ஆராதிக்கலாம், ஏனெனில் தேவன் ஆராதனை செய்ய வேண்டுமென்று விரும்புகிறார். 36. பிறகு அவர்கள் - அவர்கள் தங்களுடைய தலைகளை வணங்கி, பரிசுத்த ஆவியானவர் இந்த வரங்களை ரூபகாரப்படுத்த விரும்பும்படியான வேறொரு செய்தி உண்டா என்பதை அறியும்படியாக அதற்கு முன்பாக மீண்டும் ஜெபத்தில் இருக்க வேண்டும். 37. எந்த நேரத்திலாவது ஒரு நபர் அந்நிய பாஷையில் பேசி, அதற்கு அர்த்தம் உரைக்கப்பட்டு, நிதானிப்பவர்கள் அந்நபர் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லப் பட்டதோ அதை செய்ய சொல்லியும், அது சம்பவிக்கவில்லையென்றால், அந்த முழு கூட்ட ஜனங்களும் பீடத்தண்டை சென்று அந்த ஆவியை அவர்களை விட்டு எடுத்துப் போட வேண்டுமென்று தேவனிடம் ஜெபிக்க வேண்டும், ஏனெனில் யாருமே அதைப் போன்ற ஒரு ஆவியை விரும்பவில்லை. அது கள்ள ஆவியாகவோ, சத்துருவாகவோ, தேவனுடையதல்லாததாகவோ இருக்க வேண்டும் என்று நாம் அறிவோம், ஏனெனில் தேவன் சத்தியத்தை மாத்திரமே கூற முடியும். இந்த புதிய ஒழுங்கினை நீங்கள் தொடங்குவதற்கு முன்பு, அதை சபை தெளிவாய் புரிந்து கொள்ளட்டும். 38. பிறகு, ஒருவேளை, அது இதைப்போன்ற ஏதோவொன்றாக இருக்கலாம், செய்தியானது ஒரு குறிப்பிட்ட நபரிடம் இவ்விதமாக ஒருவேளை கூறப்படலாம், "அவர் ஒரு இரயில் பாதையினருகே வசிக்கின்றார்" அல்லது ஏதோவொன்று, "அவர் அவ்விடத்தை விட்டு போயாக வேண்டும், ஏனெனில் பாதையில் விபத்து ஏற்படப் போகிறது" அல்லது ஏதோ ஓன்று, அல்லது அதைப்போன்ற ஏதோவொன்று. 39. நிதானிப்பவர்கள், அந்தச் செய்தியைப் பேசலாம் என்றோ அல்லது முன்சென்று அதை உபயோகிக்கலாம் என்றோ சபைக்கு அனுமதி அளித்த பிற்பாடு, அவர்களுடைய நிதானிப்பு, "அது தேவனுடையது” என்று இருந்தால், அது சம்பவிக்கிறதா என்று கவனித்துப் பாருங்கள். 40. அது சம்பவித்தால், தேவனுக்கு நன்றி செலுத்தி, அவர் பட்சமாக உங்களுடைய இருதயத்தில் மிகவும் இனிமையாக - இனிமையாக இருங்கள். அவருக்கு துதியும் ஆராதனையும் ஏறெடுத்து, தாழ்மையாயிருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக தாழ்மையாய் இருங்கள். 41. உங்களுடைய மேய்ப்பரைக் காட்டிலும் அல்லது நீங்கள் ஆராதித்துக் கொண்டிருக்கும் சபையைக் காட்டிலும் - அதைக் குறித்து உங்களுக்கு அதிகமாகத் தெரியும் என்ற ஒரு நிலைக்கு உங்களை நீங்களே ஒரு போதும் தலைக்கனம் கொண்டவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம். நீங்கள் அந்த நிலைக்கு வருவீர்களானால், நீங்கள் ஆராதனை செய்வதற்கான வேறொரு நிலையை அடைய நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் புத்தி சொல்லுவேன். ஏனெனில், இங்கே சபையில் நாம் கண்டிருக்கிற விதமாக, வேதாகம ஒழுங்குக்கு வெளியே எதையும் ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம் என்று நான் மேய்ப்பரிடம் கேட்டுக் கொள்கிறேன். பிறகு இந்த ஸ்தலத்திலும், ஆராதனை செய்பவர் களிலும் இந்த வரங்கள் செயல்பட வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். அது வார்த்தையின் பிரகாரமாக தொடர்ந்து சரியாக செய்யப்படுமானால், நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்காக இயங்கிக் கொண்டிருக்கும் மகத்தானதும் அற்புத மானதுமான ஒரு சபையை காண்பீர்கள். 42. இப்பொழுது, செய்ய வேண்டிய அடுத்த காரியம் என்னவெனில், இச்சமயங்களில் ஜனங்கள் ஒழுங்கை விட்டு விலகினால், பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர்களும் தங்கள் உடைய இருதயத்தில் மிகுந்த கிருபையுள்ளவர்களுமாகிய ஒரு டீக்கனோ அல்லது ஏதோவொரு உதவிக்காரரோ அந்த நபரிடம் மரியாதையோடும் ஒரு தகப்பனைப் போன்றும் இவ்விதமாகச் சென்று அவர்களைத் திருத்த வேண்டும். அல்லது, மேய்ப்பர், அது யாராகவும் இருக்கலாம், அதைச் செய்வதற்கு டீக்கன்மார்களுக்குத் தான் அதிகமான தேவையாயுள்ளது. இச்சமயத்தில், இந்த ஆவிக்குரிய ஆராதனைகள் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கும்போது, மேய்ப்பர், ஜெப அறையிலோ அல்லது எங்கோ ஓரிடத்தில் ஜெபித்துக் கொண்டிருக்க வேண்டும். 43. பிறகு இந்தச் செய்திகள் - எந்த செய்திகளோ எந்த வெளிப்பாடுகளோ கொடுக்கப் படவில்லையெனில், ஜனங்கள் விரும்பினால் தாங்கள் எழுந்து ஒரு சாட்சியை கூற சிலாக்கியம் பெற்றிருப்பார்கள். அந்த சாட்சி தேவனுடைய மகிமைக்காக மாத்திரமே இருக்க வேண்டும். அவர்கள் இதைச் செய்வது கட்டாயமில்லை, ஆனால் செய்தியோ அல்லது எந்த பாடல் ஆராதனை தொடங்குவதற்கு அல்லது எதற்கும் முன்பு சாட்சி கூறப்பட வேண்டும், இந்த ஆராதனைகளில் அப்போது தான் சாட்சி கூறப்பட வேண்டும். 44. சபையோரே, உங்களுக்குப் புரிகிறதா-? இதைச் செய்யும்படிக்கு, போதிக்கப்பட வார்த்தை வரும் முன்பதாக நீங்கள் ஆராதனையின் ஆவியைக் கொண்ட முழு சபையாய் இருக்க வேண்டும் என்பது புரிகிறதா-? அப்போது உங்களுடைய ஆராதனையை உறுதிப்படுத்தும்படி, பரிசுத்தாவியானவர் வார்த்தையை ஊக்குவித்து, வார்த்தையினூடாக தேவனை ரூபகாரப்படுத்துகிறார். 45. இப்பொழுது, இதற்குப்பிறகு, மேய்ப்பருக்கான நேரம் வருகிறது. செய்திகள் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தால், உத்தேசமாக..... மேய்ப்பர் சரியாக , உத்தேசமாக, 7:30 அல்லது 7:45 மணிக்கு, வெளியே வர வேண்டும். மேய்ப்பர் அவருடைய... வருவதற்கு முன்பாக, இந்தச் செய்திகள் இன்னும் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தால்.... அவர் வாசித்துக் கொண்டிருந்தாலோ அல்லது அவர் ஒருவேளை எங்கிருந்தாலும் மேடையில் அவருடைய இடத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்; ஏதோவொரு சகோதரன் அவரை அறிவுறுத்த வேண்டும், ஏனெனில் மேய்ப்பர் மேடைக்கு வரும்போது, பரிசுத்தவான்கள் அறிவார்கள், அது ஆராதனைக்கான அவருடைய நேரமாக உள்ளது. அது சபையோருக்குள் தேவனுடைய ஆவியைக் கொண்டு வரும்படிக்கு, வரங்களுடைய எல்லா ரூபகாரப்படுத்தல்களுக்காகவும் போதுமான அளவு ஏராளமான நேரத்தைக் கொடுக்கிறது. 46. ஏதாவது அவிசுவாசி ஒழுங்கற்ற விதமாக அங்கிருக்க நேர்ந்தால்; ஒரு உதவிக்காரர் அல்லது டீக்கன் போன்ற இரக்க குணம்படைத்த ஒரு நபர் அவர்களிடம் போய் சொல்ல வேண்டும், அவர்கள் - அவர்கள்.... ஆராதனை ஒழுங்கில் இருக்கும் போது, அவர்கள் பயபக்தியாய் இருக்க வேண்டும் என்றோ அல்லது மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றோ கேட்டுக் கொள்ள வேண்டும். ஏனெனில், ஆவியானவர் கட்டிடத்திற்குள் இருக்கிறார், சபையின் பக்திவிருத்திக்காக தேவனுடைய வரங்கள் ரூபகாரப்படுத்தப் படுகிறது. இந்த நபரிடம் அன்போடு கூறப்பட வேண்டும், கடுமையாக அல்ல. ஒருவேளை அவர்கள் தண்ணீர் குடிக்கும்படி ஓரிடத்திற்கு வந்திருந்தாலோ அல்லது ஏதோவொரு கீழ்படியாமையோ அல்லது வேறு ஏதோவொன்றோ கர்த்தருடைய ஆராதனையில் குறுக்கிடுமானால், அப்போது வரங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்குமானால், அந்த நபரை ஒரு பக்கத்திற்கு - பின்னாலுள்ள அறைகளில் ஒன்றிற்கோ அல்லது ஏதோவொரு இடத்திற்கோ அழைத்துச் சென்று அவரிடம் பேசி, அன்போடு நடந்து கொள்ள வேண்டும். 47. இப்பொழுது, மேய்ப்பர் மேடைக்கு வரும்போது... மேய்ப்பர் மேடைக்கு வந்த பிறகு, இங்கே பிரன்ஹாம் கூடாரத்தில் இருக்கிறபடி, மேய்ப்பர் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு நல்ல பாடல்களைப்பாடி சபையோரை வழிநடத்த வேண்டும் என்று நான் பரிந்துரைக்கின்றேன். நாங்கள் அதை அவ்வாறு கண்டிருக்கிறோம், அநேகர் நடத்துவதற்கு முயற்சிக்கும் போது... அது சபையில் பிரச்சனையை மாத்திரமே கொண்டு வருகிறது. நான் சபையில் மேய்ப்பராக இருந்த போது செய்த விதமாகவே, அதை பரிந்துரை செய்கிறேன்; நானே பாடல்களைப்பாடி நடத்துவேன். மேய்ப்பர் தாமே அவ்வாறு செய்வாரானால், அது நல்ல காரியமாக இருக்கும் என்று நான் உணருகிறேன். 48. எல்லா ஜெபக்கூட்டங்களிலும் அவர்கள் ஒன்று கூடி வரும் போது, ஜெபக்கூட்டங்களின் குழுக்கள் ஒவ்வொருவரோடும் மேய்ப்பர் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட கூட்டங்களை நடத்தும்படி எந்த தனி நபரிடமும் அதை ஒருபோதும் விட்டு விடக்கூடாது. அவர்கள் பாதையை விட்டு விலகிச்சென்று, உபதேசத்தை சபைக்குள் திரும்பவும் கொண்டு வருகின்றனர், அநேக நேரங்களில், ஜீவனுள்ள தேவனுடைய சபைக்கு சம்பந்தமில்லாத மாறுபட்ட உபதேசங்களையும் மற்றவைகளையும் கொண்டு வருகின்றனர் என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். சபையோர் கூடி வரும் இடத்தில் - எல்லா ஜெபக் கூட்டங்களிலும் மற்றவைகளிலும் மேய்ப்பர் அவசியம் இருக்க வேண்டும். 49. ஒரு கூட்டத்தார் இந்த விதமாகவும் வேறு கூட்டத்தார் அந்த விதமாகவும் இருக்கும்போது, மேய்ப்பர் எந்த கூட்டத்தின் பக்கமும் சாரக்கூடாது. மேய்ப்பர் அந்த இரு கூட்டத்தினருக்கும் இடையில் நின்று அவர்களிடம் சென்று, உடனடியாக அவர்களை சமாதானப்படுத்த வேண்டும். அவரால் சமாதானப்படுத்த முடியவில்லையென்றால், ஒரு டீக்கனை அவருடன் அழைக்க வேண்டும். அவர்கள் - அவர்கள் மேய்ப்பரையோ டீக்கன் கூறுவதையோ கேட்கவில்லையென்றால், அது சபையில் கூறப்பட வேண்டும், இயேசு கூறினபடி, "அவர்கள் உனக்கு ஆஞ்ஞானியைப் போலவும் ஆயக்காரனைப் போலவும் இருப்பானாக." "பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகளைப் பரலோகத்திலும் நான் கட்டுவேன்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகளைப் பரலோகத்திலும் கட்டவிழ்ப்பேன்” என்று இயேசு சொன்னார். 50. இப்பொழுது, மேய்ப்பர் மேடையில் வரும் போது, அவர் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு பாடல்களை நடத்தி விட்டு, நேராக வார்த்தைக்குப் போகலாம். 51. ஒவ்வொருவரும் எழுந்து நின்று ஒரு வார்த்தையை சாட்சியாக சொல்லும்படியான நீண்ட சாட்சி ஆராதனைகளுக்கு நேரமில்லை. அது பிரன்ஹாம் கூடாரத்தில் செல்லுபடியாகாது. 52. இந்த ஒலிநாடாவைக் கேட்கும் யாராவது - உங்கள் சபையில் அது சரியாக இருக்குமானால், நல்லது, அது முற்றிலும் சரி தான். நாங்கள் அதைக் குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம், அது உங்களுடைய சபையில் சரியாக உள்ளது. 53. ஆனால் இங்கே நம்மிடத்தில் அது செல்லாது, அது குழப்பத்திற்கு மாத்திரமே காரணமாகும். நான் இங்கே இருபது சொச்சம் வருடங்கள் மேய்ப்பராக இருந்துள்ளேன், அது குழப்பத்திற்கு மாத்திரமே காரணமாவதை நான் கண்டிருக்கிறேன். உங்களிடம் ஒரு சாட்சி இருக்குமானால், அதற்கு... முன்பாக, ஆவியானவர் ஆசீர்வதித்துக் கொண்டிருக்கும் போதும் அதைப் போன்ற நேரங்களிலும் சபை ஜனங்களிடத்தில் சாட்சி கொடுங்கள். 54. அல்லது, சாட்சி கொடுக்க உண்மையான வழி என்னவெனில், அது சபையிலல்ல, அது வெளியே அந்தகாரமான இடங்களில் இருக்க வேண்டும். உங்களுடைய வெளிச்சம் இருளில் பிரகாசிக்கக்கடவது. பாவமும் காரியங்களும் குவிந்திருக்கும், நகரத்திற்கு வெளியிலுள்ள மதுக்கடைக்கோ வித்தியாசமான இடங்களுக்கோ சென்று அங்கே உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கட்டும். அதை செய்வதற்கான இடம் அது தான். 55. ஆனால், எப்படியாகிலும், கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து ஏதோவொரு மகத்தான விசேஷமான ஆசீர்வாதத்தையோ அல்லது நீங்கள் ஜனங்களிடம் கூற வேண்டிய ஏதோ ஓரு காரியத்தையோ உங்களிடம் கொடுத்திருப்பாரானால், அதை வேறு ஆராதனையிலோ, ஆராதனை தொடங்குவதற்கு முன்போ தொடக்கத்திலோ, அல்லது ஆவியானவர் ஆசீர்வதித்து, சாட்சிகளையும் வெளிப்பாடுகளையும், அந்நிய பாஷைகளையும், பாஷைக்கு அர்த்தம் உரைத்தல்களையும் மற்றவைகளையும் கொடுக்கும் போது, தேவனுடைய வார்த்தையைக் கொண்டு வருவதற்கு முன்பு பரிசுத்தவான்களுடைய ஆராதனையில் அதை செய்யலாம். 56. அதன்பிறகு, மேய்ப்பர் இந்த பாடலை நடத்திய பிறகு, உடனடியாக சபையை ஜெபத்தில் வழி நடத்த வேண்டும், அவர் தாமே மேடையில் நின்று கொண்டிருக்கையில் சபையோர் கூடி ஜெபிப்பதற்காக அவர்களில் எஞ்சியவர்களை ஜெபத்திற்காகத் தலைகளைத் தாழ்த்தும்படி கேட்டுக் கொள்ள வேண்டும். 57. இது ஒரு மகத்தான ஆசீர்வாதமாகவும், சபை செயல்பாடுகளில் அதிகமான ஒழுங்காகவும் இருக்கும் என்பதை நாம் கண்டிருக்கிறோம். 58. பிறகு, அடுத்த காரியமானது மேய்ப்பரே அதை செய்ய வேண்டும். அவர்கள் ஜனங்களுடைய இருதயங்களின் அநேக இரகசியங்களையும் வெளிப்படுத்தும் வரங்களோடும், கூட்டத்தில் வரங்களைக் கொண்டு செய்யப்பட வேண்டிய காரியங் களுடனும் கூடிய ஒரு உண்மையான ஆவிக்குரிய கூட்டத்தை கொண்டிருப்பார்களானால்; அப்போது தேவனுடைய ஆவியானாவர் கூட்டத்தில் இருக்கிறார், மேலும் மேய்ப்பர் வாசித்து போதனையை ஆரம்பிக்கும் போது, தேவனுடைய வார்த்தையின் பேரில் தேவனுடைய ஆவியை (அது கூட்டத்தில் ஏற்கனவே உள்ளது) அவர் கண்டு கொள்வது மிகவும் எளிதானது. அப்போது பரிசுத்த ஆவியானவர் தன்னுடைய இருதயத்தில் வைத்திருக்கிற எதையும் மேய்ப்பர் போதிக்க வேண்டும், அங்கே நின்று கொண்டு அவர் செய்ய வேண்டுமென்று விரும்புகிற எதையும் பிரசங்கிக்க வேண்டும். 59. ஆனால் சபையயோர்.... அவர் பிரசங்கிக்கும் போது களிகூர்ந்திருக்க முடியும், நிச்சயமாக, அல்லது வார்த்தையானது முன்னே வருகையில் "ஆமென்” என்று சொல்லக் கூடும். ஆனால், பரிசுத்த ஆவியானவர் மேய்ப்பர் மூலமாக கிரியை செய்து கொண்டு இருக்கும் போது, (யாராவது) எழுந்து நின்று அந்நிய பாஷையில் செய்திகளைக் கொடுத்து, அதற்கு அர்த்தம் உரைப்பார்களானால், வேதவாக்கியம் அதைக் கடிந்து கொள்கிறது, "தீர்க்கதரிசிகளின் ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கி இருக்கிறது” என்று வேதவாக்கியம் கூறுகிறது. 60. மேய்ப்பர் இந்த நபரை அழைத்து, அவர்கள் பயபக்தியோடு தங்களுடைய இடத்தில் உட்கார்ந்திருக்க வேண்டுமென்று அவர்களைக் கேட்டுக் கொள்ள வேண்டும். மேய்ப்பர் அந்நபரைக் குறித்து மிகவும் தாழ்மையான ஒரு வழியில் அணுகும்படியான ஒரு மனிதராயிருக்க வேண்டும், ஆனால் மிகவும் தாழ்மையாக அல்ல, ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சபையில் தவறான காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கண்ட போது, கயிறுகளைப் பின்னி, அவர்களை சபையை விட்டு வெளியே துரத்தியடித்தது போன்று அவரும் செய்ய வேண்டும். இப்பொழுது, தேவனுடைய சபையானது நியாயத் தீர்ப்பின் வீடாக உள்ளது, மேய்ப்பர் தான் சபையில் மிக உயர்ந்த அதிகாரம் கொண்டவராக இருக்கிறார். மூப்பரோ, பரிசுத்த ஆவியைத் தவிர்த்து அப்போஸ்தல சபையில் மிக உயர்ந்த அதிகாரமுள்ளவராக இருக்கிறார். பரிசுத்தாவியானவர் தம்முடைய செய்தியை நேரடியாக மூப்பருக்குக் கொண்டு வருகிறார், மூப்பர் அதை சபைக்குக் கொடுக்கிறார். 61. முதலாவது, பரிசுத்தவான்களுக்கும் அவர்களுடைய வரங்களுக்கும், ஆராதனை செய்வதற்கும் ஒன்றாகக் கூடி வருவதற்கும் தங்களுடைய ஸ்தானம் இருக்க வேண்டும், (நான் முன்னரே கூறிய படி), அது மேய்ப்பருக்காக கர்த்தருடைய ஆவியை கட்டிடத்திற்குள் கொண்டு வருகிறது. அப்போது, ஒரு நல்ல ஆவிக்குரிய கூட்டத்தில் அவருடைய போதனை தொடங்குவதற்கு சற்று முன்பதாக பரிசுத்த ஆவியானவர் அவர் மூலமாக கிரியை செய்வதற்காக அது அதை மிகவும் எளிதானதாக ஆக்குகிறது. அப்போது பரிசுத்த ஆவியானவர் வார்த்தைக்குள் வந்து வார்த்தையைப் போதிக்கிறார்; வரங்களின் மூலமாக அது ரூபகாரப்படுத்தப்படுகிறது. 62. அதன் பிறகு, பீட அழைப்பு கொடுக்கப்பட்டு, பரிசுத்த ஆவியானவரின் கிரியைகள் படியும், மேய்ப்பர் பொருத்திக் காண்பித்த தேவனுடைய வார்த்தையின்படியும், நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய சபையாக இருக்கிறீர்கள் என்பதை அநேகர் காண்பார்கள் மற்றும் அவர்கள் அறிந்து கொள்வார்கள். பண்டைய கால பவுல் கூறினபடி, "அவன் (முகங்குப்புற) விழுந்து, 'மெய்யாகவே தேவன் உங்களோடு இருக்கிறார்' என்று கூறுவான்” என்ற பிரகாரமாக இருக்கும். இப்பொழுது, இந்தக் காரியங்கள் பயபக்தியுடன் செய்யப்படுவதாக. 63. இப்பொழுது, மேய்ப்பர் தான் (இச்சமயத்தில் சகோதரன் நெவில்) சபையை முழுமையாக தலைமை தாங்கி நடத்துபவராக இருக்கிறார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவருடைய எந்த அதிகாரத்தையும் உபயோகிக்க சகோதரன் நெவிலுக்கு உரிமை உண்டு, வேறு வார்த்தைகளில் சொன்னால், சொல்ல வேண்டுமென்று பரிசுத்த ஆவியானவர் அவரிடம் கூறுகிற எதற்கும். சபையில் அவர் செய்ய வேண்டுமென்று தேவன் வழிநடத்துகிற எதற்கும் அவருக்கு உரிமை உண்டு. அவருடைய டீக்கன் வாரியத்தின் மேலும் அவருக்கு உரிமை உண்டு. டீக்கன் வாரியத்தையோ, தருமகர்த்தாக்களையோ, அல்லது - அல்லது பியானோ இசைக்கருவி மீட்டுபவரையோ, அல்லது சபையின் மற்ற எந்த அலுவலையோ, அவர் மாற்ற விரும்பினால், அவ்வாறு செய்யும்படி பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுவதை உணர்ந்தால், அவரால் அவர்களை மாற்றக் கூடும். அவன் எதைச் செய்தாலும், அவன் தேவ மனிதனாக இருக்கிறானா என்பதை அடையாளம் கண்டு கொள்வேன். அது கர்த்தருடையதுதானா என்பதை நான் அடையாளம் கண்டு கொண்டு, அதற்கு அதிகாரப் பூர்வமாக ஆதரவளிப்பேன், எனவே சபையை எவ்வாறு நடத்த வேண்டும் என்று வழி நடத்தும்படி உணருகிற வழியில் அதை நடத்தும் அதிகாரம் அவருக்குக் கொடுக்கப் படுகிறது. இப்பொழுது, அல்லது, சபையிலுள்ள எந்த அலுவலையும் - அவர் ஜனங்களை ஒன்றிலிருந்து வேறு ஒன்றிற்கு மாற்ற வேண்டுமென்று அவர் விரும்பினால், அதைச் செய்ய அவருக்கு அதிகாரம் உண்டு. இது எப்போதுமே அருமையானதாகவும், ஒரு போதும் சந்தர்ப்பம் சூழ்நிலைக்கு சாதகமாக பயன்படுத்தாமலும் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். 64. இப்பொழுது, கர்த்தர் உங்கள் எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக. இதை நீங்கள் மிகவும் நன்றாக அறிந்து கொண்டீர்கள் என்று நான் நம்புகிறேன். பரிசுத்த ஆவியானவர் உங்கள் ஒவ்வொருவரையும் காத்துக் கொள்வாராக. 65. நீங்கள் சபையில் உங்கள் அலுவலை எவ்வாறு செய்கிறீர்கள் என்பதற்காக தேவன் உங்களைப் பொறுப்பாளியாக்கப் போகிறார் என்பதை, தங்களுடைய உத்தியோகத்தில் நியமிக்கப்பட்டுள்ள இந்தச் சபையின் ஒவ்வொரு உத்தியோகஸ்தர்களும் அறிந்து கொள்வார்களாக. ஒவ்வொருவரும் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். 66. தீர்க்கதரிசனம், அல்லது அந்நிய பாஷையில் பேசுதல், அல்லது அதற்கு அர்த்தம் உரைத்தல் அல்லது வெளிப்பாடுகளைக் கொண்டிருத்தல் போன்றவற்றை உடைய பொது ஜனங்களே, வரங்களைக் கொண்டிருக்கிற, நம்முடைய சபையின் அன்பார்ந்த பரிசுத்தவான்களே, நாங்கள் உங்களை சபையில் கொண்டிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் பேசியிருக்கிறார் என்பதை, அவர் நிரூபிக்கும் ஒவ்வொன்றிலும் நாங்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். மேலும் நாங்கள் உங்களை நேசிக்கிறோம். இந்த வரங்கள் உங்களில் இருக்கின்றன என்றும், உங்களுக்கு சரியான தருணம் கிடைத்து, வேத பிரகாரமாக அதை நீங்கள் அளித்தால், நீங்கள் எங்கள் மத்தியில் மகத்தான உத்தியோகர்களை உண்டாக்குவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். கர்த்தர் உங்கள் எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக. அதுவே என்னுடைய உத்தமான ஜெபமாக உள்ளது. 67. இந்த ஒலிநாடாவைக் கேட்டுக் கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களே, நான் இங்கிருந்து கடந்து சென்ற பிறகு ஒரு காரியத்தைக் கண்டிருக்கிறேன், இது தான் அது: ஜனங்கள் அந்நிய பாஷையில் பேசும் போது, வேதவாக்கியத்தின்படி " இரண்டு அல்லது மூன்று பேர் மட்டில்” இருக்க வேண்டும், அவர்கள் ஒவ்வொருவராய் பேச வேண்டும். அதாவது, ஒவ்வொரு தனி ஆராதனையிலும் இரண்டு அல்லது மூன்று செய்திகள் மாத்திரமே கொடுக்கப்பட வேண்டும். வேத வாக்கியங்களின் படி, அது, “அது இரண்டு அல்லது மூன்று பேர் மட்டில் இருக்க வேண்டும், அவர்கள் ஒவ்வொருவராய் பேச வேண்டும்.'' எனவே பரிசுத்த ஆவியானவர் தம்முடைய வேதாகமத்தில் காண்பிக்கிறபடியான வழியில் இந்த காரியங்களை செய்வீர்களாக. இவையே என்னுடைய அறிவுக்கு எட்டினவரை, செய்யப்பட வேண்டிய வழியாகும். பவுல், "அவர்கள் அந்நிய பாஷையில் பேசும் போது, இரண்டு அல்லது மூன்று பேர் மட்டில் அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய் பேசவும் வேண்டும்” என்றான். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.